×

பிரபல கன்னட நடிகர் உதய் ஹட்டினகடே மறைவு!

 

பிரபல கன்னட நடிகர் உதய் ஹட்டினகடே நேற்று காலமானார். அவருக்கு வயது 61

கன்னட நடிகர் உதய் ஹட்டினகடே நரம்பு சம்பந்தமான மற்றும் சுவாசம் தொடர்பான சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.அவரின் எதிர்பாராத மறைவு கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றுள்ளது. 

உதய் ஹட்டினகடே 1987-ல் சினிமாவில் நுழைந்தார். ஜெயபேரி, அம்ருதா பிந்து, சிவயோகி அக்கமதேவி, க்ரமா, உண்டு ஹோதா கொண்டு ஹோதா, க்ரமா, அக்னி பர்வா மற்றும் சுபா மிலானா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஷங்கர்நாக், அனந்த் நாக் மற்றும் டைகர் பிரபாகர் போன்ற சில பெரிய நடிகர்களுடனும் உதய் நடித்துள்ளார்.

கடைசி சில வருடங்களாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.நடிப்பு தவிர, உதய் ஹுட்டினகத்தே புகைப்படம் எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டார் மற்றும் மாநிலம் முழுவதும் பல புகைப்பட ஆய்வகங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.