×

ஹாய் நான்னா படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

 

நானியின் 30வது படமாக தயாராகியுள்ள ‘ஹாய் நான்னா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஹாய் நான்னா’. இந்த  படத்தில் தெலுங்கு சினிமாவின்  முன்னணி நடிகரான நானி கதாநாயகனாக நடிக்கிறார். தசரா படத்திற்கு பிறகு நானி இப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார். இவர் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

<a href=https://youtube.com/embed/mYyDkpv3TOk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/mYyDkpv3TOk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து இதேஇதே என்ற பாடல் வௌியாகி உள்ளது. இணையத்தில் இது டிரெண்டாகி வருகிறது.