×

ஷாருக்கான் நடிப்பில் டன்கி படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் டன்கி. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்தது.

<a href=https://youtube.com/embed/9Z79T_o4v8c?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9Z79T_o4v8c/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.