×

ஜவான் படக்குழுவுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்து

 

ஜவான் படக்குழுவினருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரெட் சில்லி எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடித்துள்ளார். படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் அட்லீ, நயன்தாரா மற்றும் அனிருத் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளனர். கடந்த 7-ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம், சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் ஜவான் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஜவான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இதுவரை பார்த்திராக மாஸான அவதாரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். விஜய் சேதுபதி எப்போதும் போல அவரது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நயன்தாரா திரையில் பிரகாசிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.