×

ஷூட்டிங் ஸ்பாட்டில் பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட விபத்து… மலையாளத் திரையுலகில் அதிர்ச்சி!

படப்பிடிப்பின் போது நடிகர் பஹத் பாசிலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. நடிகர் பஹத் பாசில் தற்போது மலையன்குஞ்சு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடந்து வருகிறது. அப்போது படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டிருந்த போது உயரத்திலிருந்து குதித்துள்ளார். அப்போது சமநிலையை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரது முகம் மற்றும் மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு
 

படப்பிடிப்பின் போது நடிகர் பஹத் பாசிலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகர் பஹத் பாசில் தற்போது மலையன்குஞ்சு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடந்து வருகிறது.

அப்போது படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டிருந்த போது உயரத்திலிருந்து குதித்துள்ளார். அப்போது சமநிலையை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரது முகம் மற்றும் மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து தற்போது அவர் ஓய்வில் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட இந்த விபத்து மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹத் பாசில் தற்போது நடித்து வரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இயக்கி வருகிறார். கர்ணன் படத்தில் நடித்துள்ள ரஜிஷா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.