×

குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.. தமிழ் சினிமா குறித்து பவன் கல்யாண் கருத்து !

 

குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ‘வினோதய சித்தம்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ‘ப்ரோ’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரகனியே இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பேசிய பவன் கல்யாண், தமிழ் சினிமா கலைஞர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என நினைக்கக்கூடாது. தெலுங்கு சினிமா செழிப்பாக இருப்பதற்கு காரணம், இங்கு எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான். எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது அது நல்ல சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும் வேலை கிடைக்கவேண்டும் என்று யோசிக்கக்கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்திற்கு அடைத்துவிடும். 

 எனது ‘ப்ரோ’ படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கூட பல மொழி பேசும் கலைஞர்கள் பணியாற்றினர்.  தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்றவேண்டம் என்ற புதிய விதியை பற்றி கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற உலக அளவில் பிரபலமான படங்களை தமிழ் சினிமாவால் தர முடியும் என்று கூறினார். 

இதற்கிடையே சமீபத்தில் தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெப்சி ஒரு புதியை அறிவித்தது என்பத குறிப்பிடத்தக்கது.