×

இளம் நடிகருடன் விஷால் பட நடிகை காதலா ?… கிசுகிசுக்கும் தெலுங்கு சினிமா…

இளம் நடிகரை நடிகை அனு இம்மானுவேல் காதலிக்காரா என கிசுகிசு தெலுங்கு படவுலகில் தீயாய் பரவி வருகிறது. நடிகர்கள் சர்வானந்த் மற்றும் சித்தார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மஹா சமுத்திரம்’. இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. காதல் கலந்த ஆக்ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தை அஜய் பூபதி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின்
 

இளம் நடிகரை நடிகை அனு இம்மானுவேல் காதலிக்காரா என கிசுகிசு தெலுங்கு படவுலகில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர்கள் சர்வானந்த் மற்றும் சித்தார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மஹா சமுத்திரம்’. இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தை அஜய் பூபதி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இதேபோல சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்துள்ளார். இதன்பிறகு தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரை பற்றி தெலுங்கு சினிமா உலகில் கிசுகிசு பரவி வருகிறது. அது என்னவென்றால் தெலுங்கு பட உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அல்லு சிரிஸ். இவர் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் சகோதரர் ஆவார். இந்நிலையில் அல்லு சிரிசும், நடிகை அனு இம்மானுவேலும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு நடிகர் அல்லு சிரிஷ் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் ரொம்பவே நெருக்கமாக இருக்கிறார்கள். இதை பார்த்த அனைவரும் சிரிசும், அனுவும் ரகசியமாக காதலிப்பதாக கூறிவருகின்றனர். இதனால் தெலுங்கு படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.