×

தெலுங்கில் கால்பதிக்கும்  பேச்சுலர் பட நடிகை ‘திவ்யபாரதி’.

 

சூப்பர் ஹிட் படம், மக்கள் மனம் கவர்ந்த நடிகர் நடிகை, காலத்திற்கு நின்று பேசும் கதாபாத்திரம் இதெல்லாமே  ஒரு சிலருக்கு மட்டுமே தங்களது முதல் படத்திலேயே அமைகிறது. அப்படி தனது முதல் படமான பேச்சுலர்’ படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து இளசுகளை ‘யாருப்பா இந்த பொண்ணு!’ என கேட்டவைத்தவர் நடிகை ‘திவ்யபாரதி’.

சுப்புவாக நமக்கு அறிமுகமான திவ்யபாரதி தமிழில் முகின் ராவுக்கு ஜோடியாக 'மதில் மேல் பூனை' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு துறையில் கால் பதிக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மகதேஜா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பாகல் பட இயக்குநரான நரேஷ் லீ இயக்கத்தில் நடிகர் சுதிர் ஆனந்தின் 4வது படத்தில் தான் காதாநாயகியாக திவ்யபாரதி அறிமுகமாகிறார்.  இந்த படத்தில் அவர் இணைவதை அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து பான் இந்திய நடிகையாக திவ்யபாரதி மாறவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

என்னதான் சினிமா சூட்டிங் என திவ்யபாரதி பிசியாக இருந்தாலும் சமூகவலைதளமூலம் தனது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.