×

“தேசிய அளவில் தூதுவர்”- நடிகைக்கு கிடைத்த அங்கீகாரம்…!

தமிழில் நெஞ்சிருக்கும்வரை, என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களில் நடித்த நடிகை ‘பூனம் கவுர்’. அழகு பதுமையான இவர் சிறப்பான கதாபாத்திரங்கள் அமையாததால் தமிழசினிமாவில் தனக்கென்ற ஒரு இடம் பிடிக்க முடியாமல் போனது. இருப்பினும் இப்போது இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்பது இந்திய அளவில் பெருமைப்பட கூடியது. தற்பொழுது தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார் பூனம். இவர் கைத்தறி பொருட்களின் மேல் விருப்பம் கொண்டவர். எனவே,தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கைத்தறி பொருட்கள் பற்றி
 

தமிழில் நெஞ்சிருக்கும்வரை, என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களில் நடித்த நடிகை ‘பூனம் கவுர்’. அழகு பதுமையான இவர் சிறப்பான கதாபாத்திரங்கள் அமையாததால் தமிழசினிமாவில் தனக்கென்ற ஒரு இடம் பிடிக்க முடியாமல் போனது. இருப்பினும் இப்போது இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்பது இந்திய அளவில் பெருமைப்பட கூடியது.
தற்பொழுது தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார் பூனம். இவர் கைத்தறி பொருட்களின் மேல் விருப்பம் கொண்டவர். எனவே,தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கைத்தறி பொருட்கள் பற்றி சிறப்பாக பதிவிட்டு வந்தார். இதனால் அவரை ஆந்திர மாநிலத்தின் கைத்தறி பொருட்கள் தூதுவராக அம்மாநில அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் கைத்தறி தினத்தை முன்னிட்டு நடந்த இளையவழி  கருத்தரங்கில் கலந்து கொண்டு கைத்தறி பொருட்கள் பற்றி கவிதை ஒன்றை கூறி ஊக்கமூட்டும் வகையில் செயலாற்றினார்.
இக்கருத்தரங்கில் மத்திய அமைச்சர் “பிரதாப் சாரங்கி”யும் கலந்து கொண்டார். நடிகையின் ஊக்கமூட்டும் செயல்பாடுகளை பாராட்டிய அமைச்சர் பூனமை கைத்தறிபொருட்கள் தூதுவராக நியமிக்கவும் பரிந்துரை செய்தார். இதனால் நாடு முழுவதும் நடிகையின் மீது கவனம் திருப்பியுள்ளனர்.தன் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் சிறப்பான தகுதியை பெற்றதற்காக பலதரப்பட்ட மக்களும் நடிகையை பாராட்டி வருகின்றனர்.
-மா.மணிகண்டன்