×

இந்தி படவுலகிற்கு செல்ல காரணம் எனது அப்பாவித்தனம்தான் – நடிகை ராஷ்மிகா மந்தனா

இந்தி படத்தில் நடிப்பதற்கு காரணம், எனது அப்பாவித்தனமும், அழகும்தான் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக பிசியாக நடித்து வந்தாலும், இந்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ள
 

இந்தி படத்தில் நடிப்பதற்கு காரணம், எனது அப்பாவித்தனமும், அழகும்தான் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக பிசியாக நடித்து வந்தாலும், இந்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

தமிழில் நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ள அவர், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் அண்மையில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஜூனியர் என்டிஆருடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் ‘மிஷன் மஜ்னு’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து அமிதாப்புடன் ‘டெட்லி’ படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதில், நான் இந்தி படவுலகிற்கு சென்றதற்கு காரணம், ‘டியர் காம்ரேட்’ படம்தான். இந்த படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் சாந்தனு பாக்சி, அப்பாவித்தனமான என்னுடைய நடிப்பும், எனது அழகும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் அவரை கவர்ந்ததாக என்னிடம் தெரிவித்தார். ‘மிஷன் மஜ்னு’ படத்தில் இயக்குனர் நினைத்தவாறு நான் இருந்ததாகவும், அதனால் தன்னை ஒப்பந்தம் செய்ததாகவும் இயக்குனர் கூறியதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.