×

விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகை ‘ஸ்வாதி’யின் தடாலடி பதில்.

 

பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை ஸ்வாதியிடம், அவரது விவாகரத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் பளிச் என அதற்கு பதிலளித்துள்ளார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக நமக்கு அறிமுகமான நடிகை ஸ்வாதி தமிழ் கடந்து தெலுங்கு, மலையாளம் என நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது நடிப்பில் தெலுங்கில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘மந்த் ஆப் மது’ பட புரொமோஷன் பணியில் கலந்துக்கொண்டார். அபோது செய்தியாளர்கள் ஸ்வாதி தனது கணவரான விகாஸை விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகை ஸ்வாதி, “ இந்த விஷயம் குறித்து நான் எதுவும் சொல்லப்போவது இல்லை. நான் 16 வயதிலேயே  சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன் முன்பெல்லாம் எப்படி பேசுவது என எனக்கு தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. இங்கு நடக்கும் நிகழ்ச்சிக்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் எனது பர்சனல் வாழ்கை குறித்து எதுவும் கூறப்போவது இல்லை, அதனால் நான் இந்த கேள்விக்கு பதிலளிக்கப்போவது இல்லை.” என தடாலடியாக பதிலளித்துள்ளார் ஸ்வாதி.