×

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாகும் வரலட்சுமி சரத்குமார் ?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களுக்கும் எப்போதும் வரவேற்பு இருக்கும். அவரின் படங்களில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளுக்கு தெலுங்கு சினிமாவில் எப்போதும் தனி இடமுண்டு. தெலுங்கில் புகழ் வாய்ந்த நடிகராக உள்ள நடிகர் பாலகிருஷ்ணா நேற்று தனது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினார். இதையொட்டி பாலகிருஷ்ணா தனது 107வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை பிரபல கன்னட
 

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களுக்கும் எப்போதும் வரவேற்பு இருக்கும். அவரின் படங்களில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளுக்கு தெலுங்கு சினிமாவில் எப்போதும் தனி இடமுண்டு. தெலுங்கில் புகழ் வாய்ந்த நடிகராக உள்ள நடிகர் பாலகிருஷ்ணா நேற்று தனது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினார்.

இதையொட்டி பாலகிருஷ்ணா தனது 107வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை பிரபல கன்னட நடிகர் கோபிசந்த் இயக்கினார். மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகினர். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சமி சரத்குமார். ஏற்கனவே நடிகை வரலட்சுமி, ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2′ படங்களில் வில்லியாக நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் தற்போது பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.