×

சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய அல்போன்ஸ் புத்திரன்!

 

‘நேரம்’ படத்தின் மூலமாக தமிழ் மற்றும் மலையாள மொழி சினிமாவில் காலடி எடுத்துவைத்தவர் ‘அல்போன்ஸ் புத்திரன்’. இதனை தொடர்ந்து மலையாளத்தில் சாய்பல்லவி, நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்த ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானது முதல் மலையாள ரசிகர்களை கடந்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக கோலிவுட்டில் இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட். அடுத்ததாக பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார்.  இதையடுத்து தமிழ் நடிகரும், நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டரை வைத்து கிஃப்ட் படத்தை இயக்குவதாக அறிவித்தார். 

இந்நிலையில், படம் இயக்குவதிலிருந்து வெளியேறுவதாகவும், இனிமேல் படம் இயக்கப்போவதில்லை என்றும் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்திருந்தார். தற்போது, இன்ஸ்டா, பேஸ்புக், என அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.