×

டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்!

விசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி அனிகா. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். 15 வயதே ஆகும் அனிகா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிப்பார்.
 

விசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி அனிகா. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதையடுத்து அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். 15 வயதே ஆகும் அனிகா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிப்பார்.

தற்போது அது உண்மையாகவே நடந்துவிட்டது. தெலுங்கு படம் ஒன்றில் அனிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தாண்டு மார்ச் மாதம் மலையாளத்தில் அன்னா பென், ரோஷன் மெத்தியூ, ஸ்ரீநாத் பாசி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கப்பேலா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது அந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அப்படத்தில் அனிகா தான், அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷ்வக் சென்னும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.