×

நவ்யா ஸ்வாமியின் சீரியலில் நடிக்கும் மற்றொருவருக்கு கொரோனா உறுதி!

சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை நவ்யா ஸ்வாமி கொரோனாவால் பாதிப்படைந்ததாகத் தெரிவித்தார். தற்போது பிக் பாஸ் 3 தெலுங்கு போட்டியாளரும் சீரியல் நடிகருமான ரவி கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இவர் நவ்யா ஸ்வாமி நடித்து வந்த நாடகத்தில் தான் இவரும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராமில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய அவர், கடந்த மூன்று நாட்களாக தனிமையில் இருப்பதாகக் கூறினார். தன்னுடன் கடந்த சில நாட்களாக பழகி வந்தவர்கள் மற்றும் தொடர்பு
 

சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை நவ்யா ஸ்வாமி கொரோனாவால் பாதிப்படைந்ததாகத் தெரிவித்தார். தற்போது பிக் பாஸ் 3 தெலுங்கு போட்டியாளரும் சீரியல் நடிகருமான ரவி கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இவர் நவ்யா ஸ்வாமி நடித்து வந்த நாடகத்தில் தான் இவரும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராமில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய அவர், கடந்த மூன்று நாட்களாக தனிமையில் இருப்பதாகக் கூறினார்.

தன்னுடன் கடந்த சில நாட்களாக பழகி வந்தவர்கள் மற்றும் தொடர்பு கொண்டவர்களை சுய தனிமைப் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சீரியல் ஷூட்டிங்கின் போது பரவியிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் பாதித்த நான்காவது சீரியல் நடிகர் இவர். “நான் நவ்ய சுவாமியையோ அல்லது யாரையோ குறை சொல்ல விரும்பவில்லை” என்று ரவிகிருஷ்ணா தெரிவித்தார். ”கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம்” என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.