×

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா ஷெட்டி?

 

நடிகை அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் நவின் பொலி ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி’. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது. திருமணம் செய்யாமல் குழந்தை பெற நினைக்கும் பெண்ணின் கதையை காமெடி கலந்து படத்தில் கூறியுள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வாசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் ரூ.50 கோடியை கடந்தது. 

இந்நிலையில், நடிகை அனுஷ்கா மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்படுகிறது