பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை

 
பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். பாடகியின் வீட்டிற்குச் சென்ற போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை

கடந்த 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய சவர்ண சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.