மகளின் திருமணத்தில் அழுத பிரபல பாலிவுட் நட்சத்திரம்
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கான். இவர் தங்கல், தூம் 3, லால் சிங் சத்தா உள்ளிட்டபல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. மணமகனான நுபுர் திருமண ஆடைகளை அணியாமல் உடற்பயிற்சிக்கான ஆடையுடன் வீட்டிருந்து 8 கிலோமீட்டர் ஓடி வந்து திருமண மண்டபத்தை அடைந்திருக்கிறார். மேலும், அதே ஆடையுடனே திருமண ஒப்பந்தமும் செய்திருக்கிறார். அமீர் கானின் மகளுக்கு மிக எளிமையான முறையில் வித்தியாசமாக நடந்த இத்திருமணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மேலும், இத்திருமண நிகழ்வில் பங்கேற்ற தன் முன்னாள் மனைவி கிரண் ராவுக்கு அமீர் கான் முத்தம் கொடுத்த விடியோவையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.