×

பாலகிருஷ்ணா படத்தில் வில்லனாக நடிக்கும் ரியல் லைஃப் ஹீரோ!?

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில் சோனு சூட் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு மூன்றாவது முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணையும் படம் இது. இந்த படத்தை மிர்யலா ரவீந்தர் ரெட்டி என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிக்க ஒரு பிரபல வில்லன் நடிகருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக
 

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில்  சோனு சூட்  நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு மூன்றாவது முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணையும் படம் இது. இந்த படத்தை மிர்யலா ரவீந்தர் ரெட்டி என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிக்க ஒரு பிரபல வில்லன் நடிகருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தான் இப்போ இந்தியா முழுதும் சென்சேஷனல் பெர்சன். கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார் சோனு சூட். சோனு சூட்-ஐ இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சோனுவின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கின்றனராம். கொரோனாவுக்கு முன் சினிமாவில் கொடூர வில்லனாக பார்க்கப்பட்டு வந்த சோனு சூட் இப்பொழுது அனைவரது மக்கள் மத்தியில் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகப் பார்க்கப் படுவதால், இனி வரும் படங்களில் அவரை மக்கள் வில்லனாக ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.