×

பிரபல காமெடி நடிகர் மிமிக்ரி ராஜகோபாலன் காலமானார்…

கன்னட சினிமாவில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் காமெடி நடிகர் ராஜகோபாலன். பிரபல மிமிக்ரி கலைஞரான இவர் ஒருசில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். பல சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்த மிமிக்கிரி ராஜகோபாலன் நீண்ட நாட்களாக கிட்னி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். 69 வயதான அவர் பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.கடந்த புதன் கிழமை திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, குடும்பத்தினர் மருத்துவமனை அழைத்துச்செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவரது
 

கன்னட சினிமாவில் 600க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளவர் காமெடி நடிகர்  ராஜகோபாலன். பிரபல மிமிக்ரி கலைஞரான இவர் ஒருசில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

பல சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்த  மிமிக்கிரி ராஜகோபாலன் நீண்ட நாட்களாக கிட்னி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.   69 வயதான அவர் பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து  வந்துள்ளார்.கடந்த புதன் கிழமை திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, குடும்பத்தினர் மருத்துவமனை அழைத்துச்செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் அதற்குள்ளாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது. மறைந்த ராஜகோபாலுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.  இவரது மறைவை அடுத்து கன்னட திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமான இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.