×

பூங்காவில் தாக்கப்பட்ட கோமாளி பட நடிகை… மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர்!

நடிகை சம்யுக்தா ஹெக்டே தாக்கப்பட்ட விவகாரத்தில் தாக்கிய பெண் மன்னிப்பு தெரிவித்துள்ளார். கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது நண்பர்களுடன் பெங்களூருவில் உள்ள அகரா லேக் என்ற பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றபோது சமூக ஆர்வலர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்யுக்தாவும் அவரது மூன்று நண்பர்களும் ஒரு வளையத்துடன் உடற்பயிற்சி செய்ய பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அங்கு மேலே அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் ஜாக்கட்டை கழற்றி விட்டு விளையாட்டு உள்ளாடையுடன்(Sports Bra) உடற்பயிற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த சமூக
 

நடிகை சம்யுக்தா ஹெக்டே தாக்கப்பட்ட விவகாரத்தில் தாக்கிய பெண் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது நண்பர்களுடன் பெங்களூருவில் உள்ள அகரா லேக் என்ற பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றபோது சமூக ஆர்வலர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்யுக்தாவும் அவரது மூன்று நண்பர்களும் ஒரு வளையத்துடன் உடற்பயிற்சி செய்ய பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அங்கு மேலே அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் ஜாக்கட்டை கழற்றி விட்டு விளையாட்டு  உள்ளாடையுடன்(Sports Bra) உடற்பயிற்சி செய்துள்ளனர்.  ​அப்போது அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இவர்கள் பொதுவெளியில் இந்த மாதிரி கவர்ச்சியான உடையில் இருப்பதாக அவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் சம்யுக்தாவைடீ தாக்கியுள்ளார். இது சம்யுக்தாவால் மற்றொரு தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லைவ்’ ஆக முழு சம்பவத்தையும் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கினார்.
 
“இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் நாட்டின் எதிர்காலம் அமையும். நாங்கள் அகாரா லேக்கில் கவிதா ரெட்டி என்பவரால் துன்புறுத்தப்பட்டு கேலி செய்யப்பட்டோம். சாட்சிகளும் மேலும் வீடியோ ஆதாரங்களும் உள்ளன. இதை நீங்கள் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


பின்பு இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமானது. அதைத்தொடர்ந்து கவிதா ரெட்டி மன்னிப்பு தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
 
04.09.2020 அன்று நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தனர், அது ஒரு அத்துமீறிய நுழைவு.  பூங்காவில் நடந்த எல்லாவற்றிற்கும் சம்யுக்தா ஹெக்டே, அவரது நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கிறேன். நான் எப்போதுமே தார்மீக கொள்கைகளுக்கு எதிராக நிற்பேன். ஒரு பெண்ணுக்கு என்ன அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சம்பவத்தின் போது அவர்களுக்கு நடந்தது வேறு எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து நான் எனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுகளுக்காக வருந்துகிறேன். மேலும் சம்பவத்தின் எனது பக்கத்தைப் பற்றிய எனது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டேன். முழு அத்தியாயத்தையும் நான் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளேன், அதற்காக வருந்துகிறேன். இனி இதுபோல் ஒரு சம்பவம் நிகழாமலும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அன்புடன், கவிதா ரெட்டி” என்று தெரிவித்துள்ளார்.