×

வித்தியாசமான கதைக்களத்தில் ‘கரோனா பேப்பர்ஸ்’... ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

 

 வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கரோனா பேப்பர்ஸ்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

குறிப்பாக மலையாளத்தில் அதிக திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கரோனா பேப்பர்ஸ்’. இந்த படத்தில் மலையாள நடிகர் ஷான் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் காயத்ரி ஷங்கர், சித்திக், ஷைன் டாம் சாக்கோ, சந்தியா ஷெட்டி, பிபி குன்ஹி கிருஷ்ணன், ஸ்ரீதன்யா, விஜிலேஷ், மேனகா சுரேஷ், பிஜூ பாப்பன், ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.