×

ஆவணக் கொலை குறித்து படமெடுத்த வழக்கில், ராம் கோபால் வர்மா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

தெலுங்கானாவை உலுக்கிய ஒரு கவுரவக் கொலை சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்ற படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பிரணய் (24) என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். பிரணய் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், மேலும் 7 பேர் கைது
 

தெலுங்கானாவை உலுக்கிய ஒரு கவுரவக் கொலை சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்ற படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
பிரணய் (24) என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். பிரணய் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிரணயை கொள்ள கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் ராவ். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் வைத்து ராவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாருதி ராவ் மற்றும் அவரது மகளின் கதையை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கடந்த மாதம் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார்.

அம்ருதா இந்தப் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதையடுத்து, இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மர்டர் படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்தப் படம் குறித்த வழக்கு நல்கொண்டா எஸ்சி/ எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ராம் கோபால் வர்மா மற்றும் திரைப்படத்துடன் தொடர்புடைய மற்றவர்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி வழக்கில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.