×

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியீடு… நிழல் உலக தாதா பற்றி பேசும் படம்…

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனிக்கென்று இந்திய திரையுலகில் தனி இடத்தை பிடித்திருப்பவர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு, இந்தி என இருமொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமான இயக்குனராக உள்ளார். இவர் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். க்ரைம் த்ரில்லர், கேங்ஸ்டர் கதைகள், சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் என இவரது படங்கள் அனைத்துமே டார்க் மோடில்தான்
 

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனிக்கென்று இந்திய திரையுலகில் தனி இடத்தை பிடித்திருப்பவர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு, இந்தி என இருமொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமான இயக்குனராக உள்ளார். இவர் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். க்ரைம் த்ரில்லர், கேங்ஸ்டர் கதைகள், சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் என இவரது படங்கள் அனைத்துமே டார்க் மோடில்தான் இருக்கும். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மட்டும் எடுக்கப்படும் இவரது படங்கள் விருதுகளை அள்ளி குவிக்கும்.

இப்படி பெயர் பெற்ற ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள படம் ‘டி கம்பனி’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்பார்க் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃப்ர்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 5 மொழியில் வெளியாகும் இப்படத்தின் விநியோக உரிமையை மூவிஸ் இந்தியா லிமிடட் பெற்றுள்ளது.

1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹிம் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. ‘டி கம்பெனி’ படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதேபோன்று கடந்த 2002-ல் ‘கம்பெனி’ என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் பில் கேட்ஸ், திருபாய் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படத்தில் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.