×

போட்றா வெடிய.. 100 கோடி கிளப்பில் இணைந்த ‘தசரா’.. கொண்டாட்டத்தில் நானி ரசிகர்கள் !

 

நானியின் ‘தசரா’ படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நானியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் நானியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தசரா’ திரைப்படம் அசுர வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் நானி இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார்.

நிலக்கரி பின்னணியில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் விஷயங்களை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. நண்பனை கொலை செய்யும் கும்பலை பழிக்கு பழி வாங்குவதே இந்த படத்தின் கதைக்களம். இந்நிலையில் இந்த படம் முதல் மூன்று நாளில் 33 கோடி வசூலித்திருந்தது. இதையடுத்து தற்போது 100 கோடியை தாண்டியுள்ளது. இது படக்குழுவினரை மிகுந்த உற்சாகமடைய செய்துள்ளது.