×

மறைந்த ஸ்ரீ தேவியின் ஆடையில் மகள் குஷி கபூர்

 

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் போனிகபூர் தற்போது தமிழில்  வலிமை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார். போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஜோடிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார்  குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். குஷி கபூர் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் குஷி கபூர் மட்டுமன்றி ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேத்தி ஆகியோரும்இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகின்றனர்.  இப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உச்ச நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷி கபூர், தனது அம்மா ஸ்ரீ தேவியின் உடையை அணிந்து வந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.