நானி படத்தில் துருவ் விக்ரம்... ஹாய் நான்னா பாடல் வெளியானது....
நானியின் 30வது படமாக தயாராகியுள்ள ‘ஹாய் நான்னா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது.
வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார். இவர் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒடியம்மா என்ற புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல நடிகர் துருவ் விக்ரம் பாடியிருக்கிறார். துருவ், பாடல் பாடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்த பாடலில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடனம் ஆடியிருக்கிறார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.