×

இந்த விருதை கடவுளுக்கு படைக்கிறேன் - ‘தாதா சகோப் பால்கே’ விருது வாங்கிய ரிஷப் ஷெட்டி ட்வீட் ! 

 

‘காந்தாரா’ படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ள கன்னட திரைப்படம் ‘காந்தாரா’. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

கன்னடத்தில் மட்டுமே வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. மற்ற மொழிகளிலும் இந்த படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்த படம் ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டு வருகிறது. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. 

இந்நிலையில் சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வாங்கி மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ளார். அதில் இந்த விருது பெற்றதை நான் பெருமையாகவும், அசீர்வாதமாகவும் உணர்கிறேன். 

மேலும் படக்குழுவினருக்கு அனைவருக்கும் நன்றி. இனிமேல் இன்னும் நல்ல படங்களில் நடிப்பேன். தனக்கு கிடைத்த விருது தெய்வீக நடனக் கலைஞர்கள், கர்நாடக மக்கள், புனித் ராஜ்குமார் மற்றும் கடவுளுக்கு படைக்கிறேன் என்று கூறியுள்ளார்.