×

ஹாய் நான்னா படத்தின் டீசர் எப்போது தெரியுமா?

 

நானி நடித்துள்ள ஹாய் நான்னா படத்தின் டீசர் வரும் 15-ம் தேதி வெளியாகிறது.

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஹாய் நான்னா’. இந்த  படத்தில் தெலுங்கு சினிமாவின்  முன்னணி நடிகரான நானி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார். இவர் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வரும் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.