×

துல்கரின் ‘லக்கி பாஸ்கர்’ படப்பிடிப்பு துவக்கம்.

 

துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகவுள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்துதயாரிக்கும் படத்தை தனுஷின் ‘வாத்தி’ பட இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்குகிறார். துல்கர் சல்மான கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சாவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட்  வெளியாகும்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.