×

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் துல்கர் சல்மான்.. ‘சல்யூட்’ படத்தின் டீசர் வெளியீடு…

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள ‘சல்யூட்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழில் ‘வாயை மூடி பேசுவோம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். அதன்பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓகே கண்மணி’, ‘சோலா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகனாக இவர், தனது திறமையால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இவரின் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
 

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள ‘சல்யூட்’ படத்தின் டீசர்‌ வெளியாகி உள்ளது.

தமிழில் ‘வாயை மூடி பேசுவோம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். அதன்பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓகே கண்மணி’, ‘சோலா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகனாக இவர், தனது திறமையால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இவரின் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வரும் இவர், அடுத்து நடித்து வரும் திரைப்படம் ‘சல்யூட்’ . மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, துல்கரின்‌ சொந்த நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஷன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிகை டயானா பெண்டி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அதிரடி போலீசாக துல்கர் சல்மான் கலக்கியுள்ளார். இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.