×

புராதன சின்னத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த எகிப்து மாடல் அழகி கைது !

கி.மு. 27 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சின்னமான பிரமிட்டில் அந்நாட்டை சேர்ந்த மாடல் அழகி சல்மா எல் ஷெமி, அனுமதியின்றி போட்டோஷூட் நடத்தியதால் அவரும், அவரது போட்டோகிராஃபரும் கடந்த திங்கள் கிழமை அன்று கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அந்நாட்டின் வரலாற்று சின்னத்தை அவமரியாதை செய்த குற்றத்திற்காகவும் அனுமதி பெறாத குற்றத்திற்காகவும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கெய்ரோவின் புறநகரில் அமைந்துள்ள ஜோசரின் பிரமிடு
 

கி.மு. 27 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சின்னமான பிரமிட்டில் அந்நாட்டை சேர்ந்த மாடல் அழகி சல்மா எல் ஷெமி, அனுமதியின்றி போட்டோஷூட் நடத்தியதால் அவரும், அவரது போட்டோகிராஃபரும் கடந்த திங்கள் கிழமை அன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் அந்நாட்டின் வரலாற்று சின்னத்தை அவமரியாதை செய்த குற்றத்திற்காகவும் அனுமதி பெறாத குற்றத்திற்காகவும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கெய்ரோவின் புறநகரில் அமைந்துள்ள ஜோசரின் பிரமிடு என்ற இடத்தில் புராதன உடையில் சல்மா ஷெமி என்ற 26 வயதே ஆன மாடல் அழகி ,22 வயதே ஆன ஹோகம் முகம்மது என்ற போட்டோக்ராபருடன் போட்டோஷூட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தெரியவந்தவுடன் , வரலாற்று பெருமை வாய்ந்த சக்காரா பகுதியில் போட்டோ ஷூட் நடத்துவதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி எகிப்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த தொல்பொருள் அமைச்சகத்தின் 2 அதிகாரிகள் உட்பட 4 பாதுகாவலர்களும் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாற்று சின்னத்தை அவமதித்ததால் எகிப்திய மக்கள் பலரும் கடுமையான கோவத்தில் உள்ளனர்.

ஆனால் சம்பவத்தில் ஈடுபட்ட சல்மா ஷெமியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் விடீயோக்களை ஜாலியாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.