×

‘புஷ்பா 2’- வை நிறைவு செய்த பகத் பாசில்... இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட் 

 

‘புஷ்பா - தி ரூல்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார். சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

முதல் பாகத்தை வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜூன் மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இது குறித்த தகவலை இயக்குனர் சுகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.