×

சினிமாவில் வாய்ப்பு என ஏமாற்றும் கும்பல்: அதிரடி நடவடிக்கை எடுத்த மலையாள திரைத்துறை..

சினிமாவில் நடிப்பது என்பது பல இளம் பெண்களில் கனவாக இருந்து வருகிறது.. இதற்காக வாய்ப்பு தேடி அலையுல் பலரும் போலியான சிலரிடம் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். புதிதாக அறிமுகமாகும் பெண்கள் என்றில்லாமல் சினிமா நடிகைகளுக்கும் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் கூட நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக அணுகி பணம் பறிக்க முயற்சித்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், கடந்த வாரம் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்த விசாரணையில் இவர்கள் .சினிமா தயாரிப்பதாகவும்
 

சினிமாவில் நடிப்பது என்பது பல இளம் பெண்களில் கனவாக இருந்து வருகிறது.. இதற்காக வாய்ப்பு தேடி அலையுல் பலரும் போலியான சிலரிடம் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.  புதிதாக அறிமுகமாகும் பெண்கள் என்றில்லாமல் சினிமா நடிகைகளுக்கும் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சமீபத்தில் கூட நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக அணுகி பணம் பறிக்க முயற்சித்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், கடந்த வாரம் கேரளாவில்  கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்த விசாரணையில் இவர்கள் .சினிமா தயாரிப்பதாகவும் வாய்ப்பு தருவதாகவும் கூறி ஏமாற்றியதாக இன்னும் சில பெண்கள் அந்த கும்பல் மீது போலீஸில் புகார் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

இதை தொடர்ந்து மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்கா, இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பெண்கள் யாரும் சிக்கிக்கொள்ளாத விதமாக புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி பெப்காவில் மகளிர் படை என ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இளம் நடிகை அண்ணா பென் நடிப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.


 
இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது தவறாக நடந்து கொள்ள முயற்சித்தால், உடனே 984 634 2226 மற்றும் 964 534 2226 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரிவு இவர்களுக்கு உதவும் விதமான நடவடிக்கைகளை மேற்கோளும் என்று கூறப்பட்டுள்ளது.