×

குண்டூர் காரம் படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்துவருகிறது. 

இந்நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.