×

ராபின் ஹூட்டாக மாற பிரத்யேக பயிற்சி… அசத்தும் ‘பவர் ஸ்டார்’…

வரலாற்று படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம்‘பிங்க்‘.இந்தியில் மாபெரும் ஹிட்டடித்த இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகி உள்ளது.’வக்கீல் சாப்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி,நிவேதா தாமஸ்,அனன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தமன் இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின்
 

வரலாற்று படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம்‘பிங்க்‘.இந்தியில் மாபெரும் ஹிட்டடித்த இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகி உள்ளது.’வக்கீல் சாப்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி,நிவேதா தாமஸ்,அனன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தமன் இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடிந்து ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையடுத்து பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் ‘ஹரி ஹரா வீரமல்லு’. இந்த படத்தை கிரிஷ் இயக்குகிறார்.வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். பவன்‌கல்யானுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தின் 40% ஷூட்டிங் முடிந்துவிட்டது. மீதமுள்ள ஷூட்டிங்கை வரும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘ஹரி ஹரா வீரமல்லு’ படத்தில் ராபின் ஹூட் வேடத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படம் 17ம் நூற்றாண்டை சார்ந்த கதைக்களம் என்பதால் பிரத்யேக தற்காப்பு கலைகளுடன் கூடிய சண்டை பயிற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டு வருகிறார். அப்படி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.