×

என் வாழ்வில் வசந்த காலத்தைத் துவக்கியவர் இவர்தான்… இயக்குனருக்கு புகழாரம் சூட்டிய தமன்னா!

நடிகை தமன்னா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் நீடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமன்னா சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் விளம்பரப் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது தன் வாழ்வில் வசந்த காலத்தைத் துவக்கியது இவர்தான் என தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தமன்னா நடித்த ‘ஹேப்பி டேஸ்’ என்ற படத்தை சேகர் கம்முலா இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு தான் தமன்னா
 

நடிகை தமன்னா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் நீடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமன்னா சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் விளம்பரப் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தற்போது தன் வாழ்வில் வசந்த காலத்தைத் துவக்கியது இவர்தான் என தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமன்னா நடித்த ‘ஹேப்பி டேஸ்’ என்ற படத்தை சேகர் கம்முலா இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு தான் தமன்னா திரைத்துரையில் பிரபலமானார் என்றே கூறலாம். தமன்னாவின் திரைவாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றதில் சேகர் கம்முலாவிற்கு முக்கியப் பங்குண்டு.

தற்போது சேகர் கம்முலாவைச் சந்தித்துள்ள தமன்னா அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நான் இன்று சேகர் கம்முலா சாரை சந்தித்தேன். இவர் தான் என் வாழ்வில் வசந்த காலத்தைத் துவக்கி வைத்தவர். நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தை அடுத்து உற்சாகமாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.