×

ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்... ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்ட பிரசாந்த் நீல் !

 

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளையொட்டி இயக்குனர் பிரசாந்த் நீல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிக்கும் திரைப்படங்களின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. 

அ‌ந்த வகையில்  தற்போது, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். கடலோர பின்னணியில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.‌ இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை அடுத்து 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.