×

அட்டகாசமாக தொடங்கும் ஜூனியர் என்டிஆர் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஆர்ஆர்ஆர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கவுள்ளார்.  'ஜனதா கேரேஜ்' படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஜூனியர் என்டிஆர் மற்றும் கொரட்டாலா சிவா கூட்டணி இணைந்துள்ளது. 

இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார். நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையொட்டி இப்படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் வரும் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆரை வேறு ஜோனரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.