மிரட்டலாக உருவாகும் ஜூனியர் என்டிஆரின் படம்... முக்கிய அறிவிப்பு !
‘ஜனதா கேரேஜ்’ படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. ஜூனியர் என்டிஆரின் 30வது உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்து வருகிறார். நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.