×

கோவா திரைப்படம் விழாவில் ‘காதல் தி கோர்’.

 

நடிகர் மம்முட்டி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள ‘காதல் தி கோர்’ திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கி பிரபலமான  இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இந்த கோவா திரைப்படம் விழா நவம்பர் 20ஆம் தேதி  தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.