×

 மம்மூட்டி படத்தில் இணைந்த ஜோதிகா.. படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல் !

 

மம்மூட்டியின் ‘காதல் - தி கோர்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா இன்று இணைந்தார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்கு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

அந்த வகையில் மலையாளத்தில் உருவாகும் ‘காதல் - தி கோர்’ படத்தில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜோ பேபி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார். மம்மூட்டி சொந்த நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகை ஜோதிகா இன்று இணைந்தார். தற்போது படப்பிடிப்பிற்காக நடிகை ஜோதிகா வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.