×

‘காந்தாரா எ லெஜண்ட்: சாப்டர் 1’ அப்டேட் கொடுத்த படநிறுவனம்.

 

காந்தாரா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் குறித்த அப்டேட் தற்போது வந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்திர்கு கிடைத்த வரவேற்பால் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டதட்ட 16கோடி பட்ஜெட்டில் தயாரான காந்தாரா சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என படநிறுவனம் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்  வெளியாகியுள்ளது.