×

கொரானா 2வது அலை எதிரொலி… தியேட்டர்களுக்கு 50% மட்டுமே அனுமதி…

கர்நாடகாவில் 2வது அலை கொரானா வீச தொடங்கியுள்ளதால் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானா தொற்று காரணமாக டாக்டவுட் அறிவிக்கப்பட்டது. இதனால் திரையரங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. 10 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல், இதை 100 சதவீதமாக
 

கர்நாடகாவில் 2வது அலை கொரானா வீச தொடங்கியுள்ளதால் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானா தொற்று காரணமாக டாக்டவுட் அறிவிக்கப்பட்டது. இதனால் திரையரங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. 10 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல், இதை 100 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பிறகு திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரையிடப்பட்டன. கொரானா காலத்தில் நிறைய படங்கள் வெளியிடாமல் இருந்ததால் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் தற்போது கொரானா தொற்று தீவிரமாய் பரவி வருகிறது. 2வது அலை உருவாகியுள்ளதால் நாளுக்குநாள் இந்நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பையை போன்று கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தின் தொற்று விகிதம் கடந்த சில தினங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெங்களூர், மைசூர், கல்புரகி, தட்சின கன்னடா, உடுப்பி, பீதர், தர்வார் மாவட்டங்களில் கட்டுபாடுகளை கடுமையாக்கியுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் திரையரங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றின் விகிதம் அதிகரித்தால் தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்று கூறப்படுகிறது.