×

தந்தை படத்தில் நடிக்கும் மகள்… பிரபல நடிகையின் புதிய அவதாரம்

தனது தந்தையும், பிரபல மலையாள தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார். திரையுலகில் ரொம்ப பிஸியாக இருக்கும் இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய சினிமாவையே மிரள வைத்தது. அவர் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக
 

தனது தந்தையும், பிரபல மலையாள தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார். திரையுலகில் ரொம்ப பிஸியாக இருக்கும் இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய சினிமாவையே மிரள வைத்தது. அவர் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு, தேசிய விருது கொடுத்து கவுரப்படுத்தியது.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா அச்சத்தால் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையெடுத்து மகேஷ்பாபுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இந்நிலையில் தனது தந்தையும், மலையாள தயாரிப்பாளருமாக சுரேஷ்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கும் இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இந்த படத்திற்கு வாஷி என பெயரிடப்பட்டுள்ளது.