×

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கலாட்டாக்காரன்’... ‘கிங் ஆஃப் கோதா’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் 

 

 துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா‘. இந்த படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார்.  இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.  இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘கலாட்டாக்காரன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மணி அமுதவன் எழுதிய இந்த பாடலை ஜாக்ஸ் பீஜாய், பென்னி டயால் மற்றும் ஹரிதா பாலகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர். 

<a href=https://youtube.com/embed/0NO6meqFWBE?autoplay=1&mute=1&start=80><img src=https://img.youtube.com/vi/0NO6meqFWBE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">