×

நாளை வெளியாகும் சமந்தாவின் ‘குஷி‘ பாடல் ப்ரோமோ வீடியோ... முழு பாடல் எப்போது தெரியுமா ?  

 
 விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சிவ நிர்வணா இயக்கத்தில் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘குஷி’. காதல் ரொமென்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.