×

இளம் ஹீரோக்களுக்கே ஃடப் கொடுக்கும் ஸ்டைலிஷ் மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சமீபத்திய ஸ்டைலிஷ் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. மோகன்லால் வார இதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்தப் புகைப்படங்களில் இளம் ஹீரோக்களுக்கே ஃடப் கொடுக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார். சமீபத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பை முடித்த மோகன்லால் துபாய் பயணம் சென்றார். அங்கு ஐ.பி.எல் பார்த்தது முதல் சஞ்சய் தத் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியது வரை அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில்
 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சமீபத்திய ஸ்டைலிஷ் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

மோகன்லால் வார இதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்தப் புகைப்படங்களில் இளம் ஹீரோக்களுக்கே ஃடப் கொடுக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார்.

சமீபத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பை முடித்த மோகன்லால் துபாய் பயணம் சென்றார். அங்கு ஐ.பி.எல் பார்த்தது முதல் சஞ்சய் தத் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியது வரை அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் வைரலாகியது.

மோகன்லால் தற்போது பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அராட்டு’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தற்போது பாலக்காட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன்லால் நெய்யட்டிங்கர கோபன் என்ற பெயரில் இப்படத்தில் நடிக்கிறார்.