×

BREAKING : பழம்பெரும் மலையாள நடிகர் மரணம்... அதிர்ச்சியில் மலையாள திரையுலகம் !

 

 பழம்பெரும் மலையாள நடிகரான பூஜப்புரா ரவி இன்று காலமானார். 

மலையாளத்தில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் பூஜப்புரா ரவி. கடந்த 1936-ஆம் ஆண்டு பிறந்த அவர், தனது இளமை காலம் முதலில் நடிப்பில் ஆர்வம் கொண்டவர். அதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார். மேடை நாடகங்கள் மூலம் பிரபலமான அவர், சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 

முதன்முதலில் காமெடி நடிகராக திரையில் தோன்றிய அவர், சுமார் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லன் கப்பலில் தானே, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ, அம்மினி அம்மாவன், முத்தாரம் குன்னு பிஷ, பூச்சக்கொரு மூக்குத்தி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரது சிறந்த நடிப்பிற்கு கேரள மாநில அரசு பல்வேறு விருதுகளை கொடுத்து கவுரவித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இடுக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலமானார். அவரது மறைவு மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பூஜப்புரா ரவி மறைவிற்கு முன்னணி நடிகர்களாக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.