×

லிங்குசாமி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

லிங்குசாமி தெலுங்கில் இயக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரன்,சண்டகோழி போன்ற வெற்றி படங்களை இயக்கிய தமிழின் முன்னணி இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பிரபல நடிகர் ராம் பொத்தினேனிவுடன் கூட்டணி அமைத்துள்ள இவரின் படத்திற்கு தெலுங்கு படவுலகில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த படத்தின்
 

லிங்குசாமி தெலுங்கில் இயக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரன்,சண்டகோழி போன்ற வெற்றி படங்களை இயக்கிய தமிழின் முன்னணி இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பிரபல நடிகர் ராம் பொத்தினேனிவுடன்‌ கூட்டணி அமைத்துள்ள இவரின் படத்திற்கு தெலுங்கு படவுலகில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.